Friday, 20 April 2018

துபாயில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்தின் நகைகளை குப்பையில் எறிந்த பணிப்பெண்!

துபாயில் அல் கிஸஸ் பகுதியில் வசித்து வரும் ஒரு இந்திய குடும்பத்தில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் குப்பை என நினைத்து சுமார் 40,000 திர்ஹம் (சுமார் 7 ¼ லட்ச ரூபாய்) மதிப்புள்ள நகையை பையோடு தவறுதலாக குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்.

அல் கிஸஸ் பகுதியில் தெரு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் அந்த நகைப் பையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது பணியை பார்க்க சென்றுவிட்டார், (இந்த ஏழைத் துப்புரவு தொழிலாளியின் நேர்மையை "அதிகரித்துள்ள செயின் பறிப்பு சம்பவங்களால் நகைகளையும், உயிரையும், உதிரத்தையும் பலி கொடுத்து வரும்" நம் தமிழகப் பகுதிகளில் வாழ்பவர்களே சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்)

2 நாட்கள் நகையைத் தேடிய இந்தியக் குடும்பம் இறுதியாக நகை திருடு போய்விட்டதாக புகார் தருவதற்காக அல் கிஸஸ் போலீஸ் நிலையம் செல்ல, அங்கிருந்த போலீஸார் அவர்களது நகையை அடையாளம் கேட்டு ஒப்படைக்க இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றது இந்தியக் குடும்பம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: