Monday, 9 April 2018

கத்தாரில் ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக படமெடுத்தவருக்கு 6 மாத சிறை! 5000 றியால்கள் அபராதம்!

அடுத்தவர்களின் சுதந்திரத்தில், அடுத்தவர்களது இரகசிய விடயங்களில் தலையிடுதல் என்பது அரபு நாடுகளில் தண்டணைக்குரிய குற்றங்கள் என்ற அளவில் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் கத்தாரில் ஒரு பெண்ணை மையைப்படுத்தி கண்காணிப்பு கெமராவைப் பெருத்தி படமெடுத்த நபரொருவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும், 5000 றியால்கள்  அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக தெரியவருவதாவது, நபரொருவர் ஒரு பெண்ணை மையப்படுத்தி, இரகசியமாக கண்காணிப்பு கெமராவைப் தனது வீட்டில் பொருத்தி, தனது உறவினரான குறித்த அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். 

இதுபோன்ற அடுத்தவர்களது இரகசிய வாழ்வில் குறுக்கிடல் என்பது கத்தாரில் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் மேற்படி நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது 6 மாதகாலம் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு 5000 றியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (உண்மையின் பக்கம் செய்திகள்)

Author: verified_user

0 comments: