Saturday, 7 April 2018

குவைத்தில் 11 வயது பள்ளி மாணவியின் பையிலிருந்து துப்பாக்கி மீட்பு!

குவைத்தில் பள்ளிக்கூடத்தில் பயிலும் 11 வயது மாணவி ஒருவரின் பள்ளிக்கூட பையிலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. அருகிலிருந்த மாணவர் ஒருவர் அச்சிறுமியின் பையில் துப்பாக்கி இருப்பதாக ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து பை சோதனையிடப்பட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த துப்பாக்கி யாருடையது? எப்படி தனது பைக்குள் வந்தது எனத் தெரியாது என தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை மிகவும் அபாயமான விஷயமாக எடுத்துக் கொண்டுள்ள உள்துறை அமைச்சு அச்சிறுமியின் காப்பாளர்கள் மீது ஆரம்பகட்ட வழக்கை பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுபோல் கடந்த மாதம் ஒரு மாணவரின் பள்ளிக்கூட பைக்குள் ஒரு செம்மறியாட்டின் சிதைந்த தலை கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டதும், அதை யார் வைத்திருப்பார் என கண்டுபிடிக்கப்படாத நிலையில் இம்மர்மச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: