Thursday, 5 April 2018

கத்தாரில் நீங்கள் வாகன ஓட்டுநரா? இப்படி உங்களுக்கு நிகழலாம்! 1000 றியால்கள் அபராதம்!

கத்தாரைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்காக விதிக்கப்படும் அபராதங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வகையில் நிரதந்தர மெராக்கள் விதிக்கப்படாத இடங்களில் வாகனஓட்டுவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் செல்வது வழக்கம். இது போன்ற குற்றங்களைத் தடுக்கவே கத்தார் போக்குவரத்து துறை MOBILE CAMERAக்களை அறிமுகம் செய்து ஒரு நாளைக்கு ஒரு இடம் என்ற வகையில் குற்றங்களை அவதானிக்கின்றது.

நிரந்தர கெமராக்கள் இல்லாத இடங்களில் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றாத ஒருவருக்கு விதிக்கப்பட்ட அபராத்திற்கான படத்தினை எம்மிடம் பகிர்ந்து கொண்டார். இது போன்று செலுத்தியமைக்காக 1000 கத்தார் றியால்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக  வாகன ஓட்டுநர்களாக பணி புரிபவர்களைப் பொறுத்தவரை இது சிலரது மாதச் சம்பளமாக கூட இருக்கலாம்.

நிரந்தர கெமராக்கள் இருக்கும் இடமாக இருந்தாலும் சரி, இல்லாம இடாக இருந்தாலும் சரி பொருத்தமான விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தான் கடைசியில் துன்பப்பட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்
(உண்மையின் பக்கம்)

Author: verified_user

0 comments: