Thursday, 5 April 2018

அல்குர்ஆனை மனனமிட்ட குழந்தைகள் மீது, அமெரிக்கா குண்டுவீச்சு - 100 பேர் ஷஹீத் (படங்கள்)

ஆப்கான் கண்டூஸ் மாகாணத்தில் நேற்று அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றின் போது அங்குள்ளவர்களை இலக்கு வைத்து அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு பலர் படுகாயமடைந்துமுள்ளனர்.

அப்பாவிப் பிஞ்சுகள் மீதும் மாணவர்கள் மீதும் குண்டு வீசுவதுதான் இவர்களது பயங்கரவாதத்திற்கெதிரான போர். #இது ஆப்கானில் தொடரும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-Abu Ariya-




Author: verified_user

0 comments: