Monday, 5 March 2018

அமீரகத்தில் ID CARD வைத்திருக்கம் அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான முக்கிய அறிவித்தல்

அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் The Federal Authority for Identity and Citizenship (FAI) பெரும் நிறுவனங்களின் காலவிரயத்தை மிச்சப்படுத்தும் வகையில் தங்களது ஊழியர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எனும் அடையாள அட்டைகளுக்கான மின்னணு விண்ணப்பங்களை சுயமாக பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நிபந்தனைகளுடன் கூடிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுமம் குறைந்தது 100 ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும். புதிய எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க அல்லது தவறுகளை திருத்திக் கொள்ள இப்புதிய திட்டம் உதவும். நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இம்மின்னணு திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்து தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எமிரேட்ஸ் ஐடிகளை அனுப்பும் பணிகளை மட்டும் அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் மேற்கொள்ளும்.


இந்த வசதிகளை பெறுவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் தனியாக ஒரு லைசென்ஸை ஒன்றையும் பெற வேண்டும் என்பதுடன் இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் பரஸ்பரம் கையெழுத்திட வேண்டும். இதன்வழி 80 சதவிகித பணிகளே சுயதாக நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக முடிக்கும் நிலையில் அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் எஞ்சிய பணிகளை முடித்து அட்டையை அனுப்பித் தரும்.


Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: