Friday, 9 March 2018

நடப்பாண்டில் கடுமையான இழப்பைச் சந்திக்கும் கத்தர் ஏர்வேய்ஸ்! - CEO வெளியிட்ட அதிர்சித் தகவல்!

கத்தர் மீதான பிற அரபு நாடுகளின் தடையினால், கத்தர் அரசின் அதிகாரப்பூர்வ விமான சேவையான கத்தர் ஏர்வேய்ஸ் நடப்பு ஆண்டில் கடுமையான இழப்பைச் சந்திக்கும் என அதன் சி இ ஓ பாக்கர் தெரிவித்துள்ளார்.

கத்தர் உலகின் பெரும்பாலான நாடுகளுடனான வான் மற்றும் கடல் வழி தொடர்புக்கு அமீரகம் மற்றும் சவூதியையும் உலகின் அனைத்து நாடுகளுடனான தரை வழி தொடர்புக்கு முழுமையாக சவூதியையுமே சார்ந்துள்ளது. அதன் நில அமைவிடம் அவ்வாறான சூழலைத் தந்துள்ளது.


தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தி சவூதி, பெஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்து கத்தர்மீது கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தடை அறிவித்தன. இதனால், கத்தரின் தொடர்புபாதைகள் பாதிக்கப்பட்டன. சவூதி மற்றும் அமீரகத்தின் வான்வழி பகுதியாக மேற்கு மற்றும் தென்மேற்கு, தெற்கு நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்த கத்தருக்கு, அந்நாடுகளுடனான தொடர்புக்கு ஈரான் வழி சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஈரான் தன் வான்வழியினைத் திறந்து கொடுத்திருக்கவில்லையேல், கத்தர் கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியிருக்கும்.

சவூதி, அமீரக வான்வழிகள் கத்தருக்குத் தடை செய்யப்பட்டதால், சுமார் 18 நாடுகளுடனான அதன் வான்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நாடுகளுக்கு அந்நாட்டின் அதிகாரப்பூர்வ கத்தர் ஏர்வேய்ஸ், ஈரான் வழியான மாற்றுவழியினைப் பயன்படுத்துவதால் முன்னரைவிட மிக அதிக பெட்ரோல் மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது. இதனால் அது கடும் இழப்பினையும் சந்தித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 541 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு அது கடுமையான இழப்பைச் சந்திக்கும் எனவும் தொடர்ந்து நடத்துவதற்கு அதன் முதலீட்டார்கள் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் எனவும் கத்தர் ஏர்வேய்ஸின் சி ஈ ஓ பாக்கர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் :- Al Jazeera
தமிழில் :-  அப்துர் ரஹ்மான்

Author: verified_user

0 comments: