Saturday, 10 March 2018

இலங்கை அணியின் முன்னணிக் கிரிக்கெட் வீரர் அதிரடிக் கைது! காரணம் இது தான்!

நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்துப்பாக்கியால், திறந்த பல்கலைக்கழக மாணவனின் தலையில் தாக்கி படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக ரமித் ரம்புக்வெல்ல, கொழும்பு நாராஹென்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன விபத்தும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலுமே சம்பவத்திற்கு காரணம். ரமித் ரம்புக்வெல்ல, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் ஒரு முறை தெரிவு செய்யப்பட்டார்.

தேசிய போட்டிகளில் சோபிக்காத அவர், தந்தையின் அரசியல் செல்வாக்கு காரணமாகவே தேசிய அணியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரமித் ரம்புக்வெல்ல, ரஷ்ய பாலியல் தொழிலாளியை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்தும் ஒரு முறை சிக்கிக்கொண்டதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: