Thursday, 8 March 2018

கத்தார் - சவூதிக் கூட்டணிக்கிடையிலான பிரச்சினைக்கு யார் காரணம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

வளைகுடா நாடுகளின் பிரச்சனைக்குக் காரணம் யார்?
உலக நாடுகளின் சட்டாம்பிள்ளை அண்ணன் அமெரிக்கா.
அமெரிக்கா தம் அதிகாரத்தை உலக அளவில் நிலைநிறுத்துவதன் அடிப்படை மையப்புள்ளி அதன் கரன்ஸியான டாலர்.
அதாவது, உலக நாடுகளின் பொருளாதாரமே அமெரிக்க டாலரை மையப்படுத்தியே இயங்குகிறது.
எல்லா நாட்டு கரன்ஸியும் அந்தந்த நாடுகள் கையிருப்பு வைத்துள்ள தங்கத்தின் இருப்பைப் பொறுத்து அதன் மதிப்பு இருக்கும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது வளைகுடா கச்சா எண்ணெய்யைப் பொறுத்து அமைகிறது.
கச்சா எண்ணெய் விற்பனை மட்டும் டாலருக்கு என்றில்லாமல், அந்தந்த நாட்டின் கரன்ஸிக்கு என்றோ அல்லது தங்கத்துக்கு என்றோ மாற்றியமைக்கப்படுமானால்... அந்த நிமிடத்திலேயே அமெரிக்க டாலர் மதிப்பிழக்கும். உலக நாடுகள் அனைத்தும் டாலருக்கு நிகரான தங்கம் தர அமெரிக்காவின் கழுத்தைப் பிடிக்கும். டாலர் குப்பை தொட்டிக்குப் போகும்.
அமெரிக்காவின் இருப்பே, வளைகுடாவின் கச்சா எண்ணெய் விற்பனை கரன்ஸியை அடிப்படையாக கொண்டது.
வளைகுடா நாடுகள் மட்டும் கச்சா எண்ணெய் விற்பனையினை டாலரிலிருந்து மாற்றினால், அத்தோடு அமெரிக்கா ஒழியும்.
ஆக,
உலக அரசியலின் மையப்புள்ளியே வளைகுடாதான்.
வளைகுடா அமைதியாகி, அவரவர் நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கும் தருணம், அமெரிக்காவின் அழிவின் ஆரம்பம்.
வளைகுடா நாடுகள் ஒருபோதும் தாம் சுயமாக செயல்படும் நிலைக்கு வரவே கூடாது. அதற்கான தேவை அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு.
வளைகுடாவில் நடக்கும் அத்தனை பிரச்சனைக்கும் அடிப்படை புள்ளி பெட்ரோ டாலரே - அமெரிக்காவே!
(அப்துர் ரஹ்மான்)

Author: verified_user

0 comments: