Thursday, 29 March 2018

ஊழல் மோசடிகளை முறியடிக்க விசேட திணைக்களம் அமைக்க சவுதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு!

சவுதி அரேபியாவில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளைக் கண்டறித்து அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட திணைக்களம் ஒன்றை அமைக்குமாறு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஹ் அல் சுஊத்உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள நடவடிக்கைகளை விடவும் பலமானதும் வினைத்திறன் மிக்கதுமான வேலைத்திட்டத்தை கொண்டதாக இந்த திணைக்களம் அமையவுள்ளது.
நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு புதிய திணைக்களம் ஒரு பெரும் சக்தியாகும் என சவுதி சட்டமா அதிபர் செய்க் சுஊத் அலி முஜீப் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: