Wednesday, 7 March 2018

கத்தார் எம்பஸ்ஸியில் இலங்கையர்கள்! தூதுவரிடம் மஹஜர் கையளிப்பு! (வீடியோ இணைப்பு)

இலங்கையில் இடம்பெற்ற வரும் இனவாத தாக்குதல்களைக் கண்டித்து இன்று நன்பகல் கத்தாரில் உள்ள இலங்கை சொந்தங்களால் கத்தாருக்கான தூதுவர் திரு. லியனகே அவர்களிடம் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக மஹஜர் கையளிக்கப்பட்டது. பொது ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள கத்தாரில் இலங்கையர் குவிந்ததைத் தொடர்ந்து கத்தார் பொலிஸார் அங்கு விரைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

விரைந்த போலிஸார் விபரங்களை கேட்டறிந்து ஒரு சிலரைத் தவிர அங்குள்ள அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. என்றாலும் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக கத்தாருக்கான இலங்கை தூதுவரிடம் மஹஜர் ஒன்று கையளிக்கப்பட்டதோடு, சம்பவங்கள் தொடர்பான விளங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Author: verified_user

0 comments: