Sunday, 11 March 2018

வீரசிங்கவுக்கு அமைச்சர் ஒருவரே நிதி உதவி வழங்கியுள்ளார் : விரைவில் புது தகவல்களை வெளியிடுவேன் - வாசுதேவ நானயக்கார அதிரடி!

கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்துக்கு மூல காரணமான மஹாசேன பலகாய அமைப்பின் தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த நபர்களுக்கு இனவெறித் தாக்குதலை மேற்கொள்ள அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரே நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக, புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றுக்கு தெரிவான அமைச்சரே கண்டி கலவரத்தின் பின்னணியில் உந்துசக்தியாக செயற்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘மஹாசேன பலகாய” என்ற பெயரை குறித்த அமைப்புக்கு சூட்டியது இந்த அமைச்சர் தான். கண்டியில் தாக்குதல்களை மேற்கொள்ள அமித் வீரசிங்கவுக்கு குறித்த அமைச்சரே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மிக விரைவில் மேலும் பல விபரங்களுடன் அவருடைய பெயரை நான் வெளியிடுவேன் என்றார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றுக்கு தெரிவான தேசிய உடை அணியும் மெல்லிய உயரமான நபரே காரணம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
(நன்றி - Tamilnews)

Author: verified_user

0 comments: