Sunday, 11 March 2018

சவுதி அரேபியா வாழ் வெளிநாட்டு உறவுகளுக்கு ஒரு முக்கியமான தகவல்! பகிருங்கள்

தற்போது சவுதி அரேபியாவில், 2030 ஆம் ஆண்டை நோக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் பயணத்தில் தற்போதை சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்கள் தொலைநோக்கு பார்வை மனதில் கொண்டு தன்னுடைய நாட்டை வளப்படுத்தும் நோக்கில் மிக நேர்த்தியாக கொண்டு செல்கிறார்..

இதில் அவர் எடுத்த முதல் நடவடிக்கை, அனுமதியின்றி தங்கியிருந்த ஆப்பிரிக்க, எமன், இந்தியா, பங்களாதேஷ், உள்ளிட்ட நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானவர்களை பொது மன்னிப்பு அளித்து, எந்தவிதமான அபராதமும் இல்லாமல் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்..!

இதில் பல வருடங்களாக தவித்து வந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெற்று சந்தோஷம் அடைந்தார்கள்..

இப்போது இங்கு நிலவி வரும் சூழ்நிலை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. அவர் இடத்திலிருந்து சிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது சரிதான்..

இது எல்லாம் 2020 வரை மட்டுமே நடக்கும், பிறகு மீண்டும் சவுதி நாட்டிற்கு படித்தவர் அதிமானோர் தேவைப்படும், அதுவும் இந்திய நாட்டை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகம் எடுப்பார்கள்..

ஃப்ரீ விஸா முறையை ஒழிக்கவும், மாதம்  மாதம் பணம் வாங்கிகொண்டு வெளியில் வேலைக்கு அனுப்பும் சவுதி நாட்டவர்களை தடுக்கவே இந்த கடுமை நடைமுறைப்படுத்-தப்பட்டு வருகிறது..

இதைக் கண்டு யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை, நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களது (ஐ.டி.) இக்காமா மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், உரிய அதிகாரி சோதனை செய்யும்போது மிக தைரியமாக எடுத்து காண்பியுங்கள்..

சவுதி நாட்டை பொருத்தவரை போலீஸ் துறையில் உள்ள அதிகாரிகள் மிகவும்நல்ல மனம் படைத்தவர்கள்.. வதந்திகளை நம்பாமல் எப்போதும் போல் சந்தோஷமாக இருங்கள்..

அன்புடன்..
நம்புதாளை ஃபாரிஸ், 
Riyadh Saudi Arabia 
தொடர்பு எண் : +966565605679

Author: verified_user

0 comments: