Sunday, 11 March 2018

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சகவாழ்வு, ஒற்றுமை விளிப்புணர்வு நிகழ்ச்சி! (படங்கள்)

கடந்த சில தினங்களாக எமது தாய் நாட்டில் கொழுந்துவிட்டெறியும் இனவாத தீயின் காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது, நாடு என்றவகையில் நாம் எதிர்நோக்கும் விளைவுகள் பற்றியும், தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றியும், கத்தார்வாழ் இலங்கை பிரஜைகளுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் “அக்கரையில் நாம்” அமைப்பின் கத்தார் கிளையின் ஏற்பாட்டில் இலங்கை தூதரகத்தில் நடைபெற்றது.

இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் கத்தார் நாட்டின் தூதுவர் திரு. A.S.P லியனகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வொன்றுகூடலில் கத்தார் நாட்டில் வசிக்கும் இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பாறிய அளவில் கலந்துகொன்டனர். இங்கு கருத்து தெரிவித்த தூதுவரினதும் மற்றும் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களினதும் பொதுக்கருத்து “சகல இனவாதங்களும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும், சகல இன மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, தோழமையுடன் வாழ்வதற்குன்டான சூழலை ஏற்படுத்த வேண்டும்” என்பதாகும்.

இங்கு வரவேற்புரை மற்றும் ஒன்றுகூடலுக்கான நோக்கம் பற்றிய விளக்கவுரை “அக்கரையில் நாம்” அமைப்பின் கத்தார் கிளை செயளாலர் திரு. அருன ருவன் குமார அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கத்தார் தூதுவர் திரு. A.S.P லியனகே மற்றும், இலங்கை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. சனத் கொஹொவிலகே ஆகியோர் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மௌளவி அஷ்ரப் அவர்களின் உரை இடம்பெற்றது. 

கத்தாரின் இலங்கை வர்த்தகர்களின் சார்பாக திரு. டெனிஸன் சில்வா அவர்கள் கருத்து தெரிவித்தார். முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திரு. ஹஸீம் ஹம்ஸா, திரு. ரிஸ்வான் யாஸீன், மற்றும் பாஹிம் மௌலானா ஆகியோர் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர். 

கத்தார் தம்ம பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி திரு. கீர்த்தி லியனகே அவர்கள் கருத்து தெரிவித்ததோடு இந்து சகோதரத்துவத்திற்காக திரு. உதய குமார் அவர்கள் கருத்து தெரிவித்தார். “அக்கரையில் நாம்” அமைப்பின் கத்தார் கிளை சார்பாக அதன் புரவலர் அனுர ஹெட்டிகொட அவர்கள் கருத்து தெரிவித்ததோடு நன்றியுரை கத்தார் தூதரகத்தின் துணைத்தூதரக அதிகாரி திரு. துலிப் ஜயவர்தனா அவர்களால் நிகழ்த்தப்பட்டது.








Author: verified_user

0 comments: