Monday, 26 March 2018

கண்டி வன்­முறையில் கைது செய்­யப்­பட்ட யாரையும் நாம் பாது­காக்க மாட்டோம் - உரிய தண்­டனை வழங்­கப்­படும்.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை போன்று இனி­மேலும் இன வன்­மு­றை­கள் நடை­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.  அத்­துடன் கண்டி வன்­முறை விட­யத்தில் கைது செய்­யப்­பட்ட யாரையும் நாம் பாது­காக்க மாட்டோம். அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான வன்­பேச்­சுக்­களை தடை செய்­வது குறித்து சட்­டத்­த­ர­ணிகள் உதவி புரிய வேண்டும். மேலும் இது தொடர்­பாக எதிர்­வரும் காலங்­களில் சட்­ட­த்த­ர­ணி­களை சந்­தித்து பேசுவேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இலங்கை சட்­ட­த்த­ர­ணிகள் சங்­கத்தின் 44 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பு மிலோதா கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. அங்கு பிர­தமர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை போன்று இனி­மேலும் இன வன்­மு­றை­கள் இடம்பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. அத்­துடன் கண்டி வன்­மு­றையாளர்கள் யாரையும் பாது­காக்க மாட்டோம். இன­வாதத்தை தூண்டும் வகை­யி­லான வன்­பேச்­சுக்­களை தடை செய்­வது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். இதற்­கான சட்­டங்­களை உரு­வாக்க வேண்டும். குறித்த சட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு சட்­ட­த்த­ர­ணிகள் உத­வி­பு­ரிய வேண்டும். எனவே இது தொடர்பில் எதிர்­வரும் காலங்­களில் சட்­ட­த்த­ர­ணி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக உள்ளேன்.
சமூக வலைத்­த­ளங்கள் தொடர்­பில் கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்க வேண்டும். அத்­துடன் அமெ­ரிக்க தேர்­தலின் போது கேம்பிரிட்ஜ் அனா­லிடிக்கா நிறு­வ­னத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதன்படி பேஸ்புக்கில் உள்ள தனிநபர்களின் தகவல்களை சூட்சுமமாக பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை தற்போது இலங்கையிலும் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

Author: verified_user

0 comments: