Monday, 12 March 2018

ஷார்ஜாவில் நடு ரோட்டில் காரை நிறுத்திய ஓட்டுனர் மீது மற்றொரு கார் மோதி மரணம்!

அமீரகம், ஷார்ஜாவின் ஷேக் முஹமது பின் ஜாயித் ரோட்டில் தஸ்ஜீல் வில்லேஜ் அருகே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அதனை ஓட்டி வந்தவர் நட்டநடு ரோட்டிலேயே காரை நிறுத்தினார்.

கோளாறால் நின்று போன அந்தக்காரிலிருந்து அவர் இறங்கவும் முயற்சிக்கவில்லை என்பதுடன் காரையும் ரோட்டின் ஓரமாக கொண்டு சென்று நிறுத்த எத்தகைய முயற்சியை செய்யவில்லை. இந்நிலையில் அந்த ரோட்டில் வேகமாக வந்த மற்றொரு கார் நட்டநடு ரோட்டில் நின்ற கார் மீது மோதியதில் காருக்குள் இருந்த டிரைவர் மரணத்தை தழுவினார்.

வாகனங்களில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வாகனங்களை சாலை ஓரங்களுக்கு கொண்டு செல்லும்படியும் அல்லது மிக அவசர காலங்களில் பிற வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சைகை அடையாளங்களை (Yield Sign) மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர் ஷார்ஜா போலீஸார்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: