Friday, 30 March 2018

அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை அறிவிப்பு!

அமீரகத்தில் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப சில்லறை பெட்ரோல் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை விற்பனை விலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலை அறிவிப்பில் பெட்ரோலின் மீது எத்தகைய மாற்றமும் இல்லை ஆனால் டீசல் விலையில் மட்டும் 3 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை 5 வாட் வரியையும் உள்ளடக்கியது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை நிலவரம் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளது. 
1. சூப்பர் 98 : 2.33 திர்ஹம் (2.33)
2. ஸ்பெஷல் 95 : 2.22 திர்ஹம் (2.22)
3. டீஸல் : 2.40 திர்ஹம் (2.43)

கவனிக்கவும்: 
நடப்பு மார்ச் மாதம் விற்கப்பட்டு வரும் ஈ பிளஸ் : (2.14 திர்ஹம்) ரக பெட்ரோல் விலை குறித்த அறிவிப்பு காணப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: