Thursday, 8 March 2018

குவைத்தில் பங்களாதேஷ் நாட்டினரை வேலைக்கு எடுக்க மீண்டும் தடை விதிப்பு!

குவைத்தில் பணியாற்றும் பங்களாதேஷ் நாட்டுக்காரர்களால் வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிட விசா போன்ற விஷயங்களில் பல சட்டவிரோத செயல்களும் பல ஒழுங்கீனமான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் பங்களாதேஷ் நாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளது குவைத் அரசின் உள்துறை அமைச்சகம். (The source attributed the decision to irregularities and abuses by traffickers in work and residency permits for Bangladeshis)

பொதுவாக வீட்டு வேலைப்பணிகளில் மீது வழங்கப்படும் வேலைவாய்ப்பு விசாக்கள் முறைகேடாக பயன்பட்டு வந்தது அதிகரித்துள்ளதை தொடர்ந்தே இந்த தடை மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு முதல் குவைத் பங்களாதேஷிகளை வேலைக்கு எடுத்து வருவது 2007 ஆம் ஆண்டு வரை எந்தத் தடங்களும் இன்றி நடைபெற்றது. இதன் மூலம் சுமார் 480,000 பேர் பயனடைந்தனர் என்றாலும் இவற்றில் பல முறைகேடுகளும், சட்ட விரோதச் செயல்களும் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் பங்களாதேஷில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்க தடை செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. பின்பு 2016 ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அதிகரிப்பது உணரப்பட்டதை அடுத்து
வீட்டுப் பணியாளர்களாக வீட்டுக்கு ஒரேயொரு பங்களாதேஷ் நாட்டவரை மட்டுமே சொந்த வீடு வைத்துள்ள குவைத்தியர்கள் வேலைக்கு எடுக்கலாம் என்றும், பிற நாட்டு வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையின் மீது இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 200,000 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தநிலையில் ஒட்டுமொத்தமாக பங்காளிகளையே வேலைக்கு எடுக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிகளின் சட்டவிரோதச் செயல்கள் குவைத் மட்டும் சந்திக்கும் பிரச்சனையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியிலும், அமீரகத்திலும் செய்யப்பட்டிருந்த தடை சமீப காலங்களில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: