Thursday, 29 March 2018

வெளிநாட்டவர்களை திருமணம் முடிப்பது தொடர்பில் சவுதி அரசு வெளியிட்டுள்ள புதிய சட்டம்

(அடையாளப்படம்)

ஐம்பது வயதை விட கூடிய சவுதி பெண் ஒருவருக்கு வெளிநாட்டவர்களை திருமணம் முடிக்க முடியாது என சவுதி அரசாங்கம் புதிய சட்டம் இயற்றியுள்ளது.

வெளிநாட்டவர்களை திருமணம் முடிப்பது தொடர்பில் சவுதி அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய சட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் ஒருவரை சவுதி பெண் ஒருவர் திருமணம் முடிப்பதாயின் அப் பெண்ணின் வயது 30 இற்கும் 50 இற்கும் இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

இதேவேளை, சவுதி ஆண் ஒருவர் வெளிநாட்டு பெண் ஒருவரை திருமணம் முடிப்பதாயின் அந்த ஆணின் வயது 40 இற்கும் 65 இற்கும் இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும் எனவும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சவுதி நீதி அமைச்சின் தகவல்களின் அடிப்படையில், அந்நாட்டில் 7 லட்சத்துக்கும் அதிகமான சவுதி பெண்கள் வெளிநாட்டவரை திருமணம் முடித்துள்ளதாகவும், இது அந்நாட்டவர்களை திருமணம் முடித்துள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில் 10 வீதம் என சுட்டிக்காட்டியுள்ளது.

Author: verified_user

0 comments: