Sunday, 18 March 2018

கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிவோருக்கான முக்கிய அறிவிப்பு! நீங்களும் இதில் சிக்கலாம்!

பாடசாலை பஸ்களுக்குப் பின்னால் செல்லுகின்ற வாகனங்கள் போதிய அளவு தூரத்தை இடைவெளியாக விடாது பயணிக்கின்ற வாகனங்களுக்கு போக்குவரத்து குற்றத்தைப் பதிவு செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பஸ்களில் பொருத்தப்படவிருக்கும் கண்காணிப்புக் கெமராக்களின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பான அறிவித்தலை போக்குவரத்து விளிப்புணர்வு திணைக்களத்தின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்கள்.

இன்று முதல் கத்தாரில் 34வது போக்குவரத்து வாரம் நடாத்தப்படுகின்றது. இதில் பாடசாலை பஸ்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட இருக்கின்றன. இது Darb Al Saai பகுதியில் இடம்பெறுகின்றது. 

என்றாலும் எத்தனை மீற்றர்கள் இடைவெளி விட்டுப் பயணிக்க வேண்டும் என்ற தகவலும், அவ்வாறு பயணித்து சிக்குபவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது தொடர்பான தெளிவாக விபரங்கள் இன்னும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாரதிகளாக பணிபுரியும் சொந்தங்கள் இன்றிலிருந்தே முன்னெச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துவது சிறந்தது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
சாதாரண நேரங்களில் வானங்களுக்கு இடையிலான தூரம்


Author: verified_user

0 comments: