Friday, 9 March 2018

ஜும்மா பள்ளிக்கு வந்து காவல் இருந்த விகாராதிபதி! இன்று இலங்கையில் நடந்த நெகிழ்சி சம்பவம்!

அவிஸ்ஸாவெல, தெஹியோவிட்ட பகுதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற ஜும்மா தொழுகையின்போது முஸ்லிம்களுக்கு எந்த தீங்கும் இடம்பெற்று விட கூடாதென்னும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த விகாராதிபதி, வர்த்தக சங்கம் மற்றும் பெரும்பான்மை இன அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.

இதன்போது குறித்த விகாராதிபதி பள்ளிவாசலுக்கே வந்து ஜும்மா தொழுகை முடியும் வரை அமர்ந்திருந்து முஸ்லிம்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்து கொண்டார்.
மேற்படி இந்த சம்பவம் பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

அல்மசூறா நியூஸ்

Author: verified_user

0 comments: