Thursday, 8 March 2018

வன்முறைகளை கைவிட்டு ஒற்றுமையாக வாழுங்கள்! இப்படியும் ஒரு முன்மாதிரிப் புத்த மதகுரு!

இலங்கையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள இந்நிலையில் வன்முறைகளை கைவிட்டு அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என பௌத்த துறவி ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீண்டகால போராட்டத்திற்கு பின்னர் ஒரு நாடு என்ற நிலைப்பாட்டில் நெருக்கமாக வந்துள்ளோம்.

இந்நிலையில் முஸ்லிம் கிராமங்களை தாண்டிச் செல்லும் சிங்களவர்களும், சிங்கள கிராமங்களை

தாண்டிச் செல்லும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். வன்முறைகளை கைவிட்டு இளைஞர்கள் அமைதியாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து கல்விமான்கள், சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரோக்கியமான நிலையை உருவாக்க வேண்டும்.

1983ம் ஆண்டு இனக்கலவரங்களின் கொடூரத்தை நேரில் பார்த்த முதியவர்கள், தற்போதைய

இளைஞர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும் என தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Author: verified_user

0 comments: