Friday, 9 March 2018

எமக்கும் கத்தாருக்குமான பகை, அமெரிக்கா - கியூபாக்கிடைலான பகை போன்றது - சவூதி இளவரசர்

அண்மையில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவு அளித்து வருவதாக குற்றம் சாட்டி சவுதி உட்பட முக்கிய வளைகுடா நாடுகள் கத்தாருடனான தமது இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டன.

மேலும் பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தப் பட்டது. இந்நிலையில் மார்ச் இறுதியில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெறவுள்ள அரபு நாடுகளுக்கான மாநாட்டில் கத்தாரும் கலந்து கொள்ளலாம் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் கத்தாருடனான பகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் இது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே உள்ள பகைக்கு ஒப்பானது என்றும் அரபு அல்லது வளைகுடா நாடுகளின் கூட்டமைப்புக்கு வெளியே எடுக்கப் படும் முடிவுகளை நாம் ஏற்க மாட்டோம் எனவும் சவுதி இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எண்ணெய் வளம் மிக்க செல்வந்த நாடுகளில் ஒன்றான கத்தார் மற்றும் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ISIS உட்பட மோசமான தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி வருவதாக சவுதி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: