Wednesday, 21 March 2018

கத்தாரில் வீசா விற்பனை மோசடி, போலி நிறுவனம் நடாத்தியமை தொடர்பில் மூவர் அதிரடிக் கைது!

வீசா விற்பனை மற்றும் போலி நிறுவனங்கள் நடாத்தியமை தொடர்பில் மூவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக கத்தார் பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரின் குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்யையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரும் சேர்ந்து போலி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் 11 நிறுவனங்களுக்குரிய போலி முத்திரைகள்(stamp) களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதோடு சில நிறுவனங்களுக்குச் சொந்தமான கிரடிட் காட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஆசிய நாட்டவர் என்பதோடு மேலும் இருவர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: