Thursday, 8 March 2018

மற்றவர்களை கவர பெர்ஃபியூம் பயன்படுத்துபவரா நீங்கள்.. கண்டிப்பாக இதை கவனியுங்கள்..

வாசனைத் திரவியங்கள் ஆதி காலம்தொட்டே மனிதனை வசீகரித்து வருபவை. பலவிதங்களில் பல வண்ண வாசனைத் திரவியங்கள் விற்க்கபடுகிறது. பெர்ஃபியூமை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். எதை தேர்வி செய்வது என்பதை பார்ப்போம்..

  • EDP பெர்ஃபியூம்களின் வாசனை அதிக நேரம் நீடித்திருக்கும். எனவே, EDT பெர்ஃபியூம்களை விட EDP பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • பெர்ஃபியூம்களை முதலில் முகர்ந்து பார்க்க வேண்டும். சில நேரத்திற்கு பின் வாசத்தில் சிறு மாற்றும் ஏற்படும். இது 10 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். அதன் பின்னர் வேறு சிறு மாற்றம் ஏற்படும். இந்த மூன்று வாசனைகளுமே உங்களுக்கு பிடித்திருந்தால், அது உங்களுக்கான பெர்ஃபியூம்.
  • பெர்ஃபியூம்களை கையில் அடித்து பாருங்கள். எவ்வளவு நேரத்தில் அது கரைகிறது என்பதை அறியலாம்.
  • பெர்ஃபியூம்களை வாங்குவதற்கு முன் நிறைய பெர்ஃபியூம்களை முகர்ந்து பார்ப்பது வாடிக்கை. அப்படி செய்யும்போது, 3 பெர்ஃபியூம்களை முகர்ந்ததும் சில காஃபி பீன்ஸ்களை முகருங்கள். இது மேலும் சில பெர்ஃபியூம்களை முகர உதவும்.
  • பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கும்போது, மணிக்கட்டில் மட்டுமே அடித்து பார்க்காதீர்கள். வேறு சில இடங்களிலும் அடித்து பாருங்கள்.
  • பெர்ஃபியூம்களின் விளக்கங்களை படித்து பார்த்து அதற்கு ஏற்றதுபோல உங்களின் தேர்வு அமையக்கூடாது. எந்த வாசனை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
  • பெர்ஃபியூம்களின் இன்டென்சிட்டியை கவனியுங்கள். 20% லிருந்து 40% வரை இன்டென்சிட்டி உள்ள பெர்ஃபியூம்கள் தேர்வு செய்யுங்கள்.

Author: verified_user

0 comments: