Thursday, 8 March 2018

பிரேசில் விமானத்தில் துணிகரம் ~ சினிமா பாணியில் 5 மில்லியன் டாலர்கள் கொள்ளை!

பெரும் வணிகர்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள், ஆளும் கட்சிகளுக்கு வேண்டியவர், அடிமையாய் சலாம் போட்டு வாழ சம்மதித்து சுருட்டுவோர் என வலம்வந்த பலர் பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஒடுவது ஒரு நீண்ட தொடராகியதால் நாம் 'பிஸ்கோத்து' ரூபாய்களை திருடுவோரையெல்லாம் கொள்ளையர்கள் லிஸ்டிலேயே சேர்ப்பதில்லை.

ஞாபகம் இருக்கிறதா? கடந்த வருடம் 2016 ஆம் வருடம் சேலத்திலிருந்து சென்னை வந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் ஓட்டையை போட்டு சுமார் 5.75 கோடியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த விஷயம் பல நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டது பிறகு வழமைபோல் மக்கள் மறக்க, விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளாலும் இன்று வரை விடை சொல்ல இயலவில்லை. அதுபோகட்டும் விஷயத்திற்கு வருவோம்...

பிரேசிலின் சவோ பவ்லோ விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஜூரிச் புறப்பட்ட லுப்தான்ஸா நிறுவனத்தின் கார்கோ விமானம் பிரேசிலின் மற்றொரு விமான நிலையமான விரக்காபோஸ் விமான நிலையத்தில் இடைநிறுத்தமாக தரையிறங்கியது.

பின்பு மீண்டும் ஜூரிச் நோக்கி விமானம் புறப்பட வெறும் 6 நிமிடங்களே உள்ள நிலையில் லுப்தான்ஸா விமானத்தில் வம்படியாக சிலர் உள்நுழைந்து 5 மில்லியன் டாலர்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ரன்வே பாதுகாப்பு படைவீரர்களைப் போல் ஒரு பிக்கப் காரில் வந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவம் மிகத்துள்ளிய திட்டமிடலுடன் சரியாக 6 நிமிடங்களிலேயே நடந்து முடிந்துள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Sources: AFP / Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: