Saturday, 31 March 2018

கத்தார் - சூடான் உறவில் புதிய அத்தியாயம்! 4 பில்லியன் டொலரில் செங்கடல் துறைமுக ஒப்பந்தம்

சூடான் மற்றும் கட்டார் அரசாங்கங்கள் 4 பில்லியன் டொலரில் செங்கடல் துறைமுக ஒப்பந்தமொன்றை கையொப்பமிட்டன. கட்டார் மற்றும் சூடானின் கூட்டு நிர்வாகத்தில் செங்கடல் துறைமுக அபிவிருத்திக்காக 4 பில்லியன் டொலர் ஒப்பந்தம் கையெழுத்திட்டதாக சூடானின் போக்குவரத்து அமைச்சர் மகாவி முஹம்மட் அவாட் (Makawi Mohamed Awad) அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கட்டார் அதிகாரிகள் கடந்த ஞாயிறன்று சூடானுக்கு விஜயம் செய்த போது சுஆகின் (Suakin) துறைமுக ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு வந்தது. இரு நாடுகளும் ஒப்பந்தத்தை விவாதித்திருக்கின்றன,ஆனால் இன்னும் இறுதி முடிவுகள் இன்னும் செய்யப் படவில்லை என கட்டார் அதிகாரிகள் தெரிவித்தனர். (கத்தார் தமிழ் செய்திகள்)

Author: verified_user

0 comments: