Saturday, 31 March 2018

சவூதியில் மரணி்த்த இலங்கைப் பெண்ணின் உடல் 2 வருடங்களுக்குப் பின் தாயகம் அனுப்பப்பட்ட சோகம்!

இலங்கையை சேர்ந்த சஸ்பீயா என்னும் பெண் இருபது வருடங்களுக்கு முன் பணிப்பெண்ணாக சவூதி சென்றுள்ளார் . அங்கு பணி புரிகையில் கடந்த 2005 உடல் நல குறைவினால் தனது எஜமானின் மூலம் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 25, 2015 அன்று மருத்துவமணையில் காலமானார். பின் குறித்த உடலை இலங்கைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் திணைக்களத்தின் பெண்ணின் பயோமெட்ரிக் விவரங்கள் ஏதும் இல்லாமையினால் இல்லாதிருந்தால் சடலம் பிரேத அறையில் பேணப்பட்டது

சஸ்பீயாவின் விவரங்களை பெற மருத்துவமனையின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில் . , இந்த விஷயத்தை விசாரித்த போலீஸார், 2000 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்ட பாஸ்போர்ட்டைக் கண்டறிந்தனர்

சஸ்பீயா சேவையில் இருக்கும் பொது முறையான வசிப்பிட ஆவணங்கள் இல்லாமல் பணிபுரிந்ததாக தெரியவந்தது. மேலும் அவர் வீட்டு வேலைவாய்ப்பு விசாவில் ராஜ்யத்தில் வந்திருப்பதாகவும், அவளுடைய வதிவிட அனுமதி / ஆவணங்கள் அவளுடைய முதலாளிகளால் செயல்படுத்தப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

பின் சவூதி அரேபியாவில் உள்ள சமுதாய உறுப்பினர்களின் உதவியுடன் சப்யாவின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு 2016 ம் ஆண்டு குறித்த சம்பவத்தைப் பற்றி சவூதிக்கான இலங்கை தூதரகதிற்க்கு தகவல் தெரிவிக்க பட்டது

இந்நிலையில் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த வரம் (மார்ச் 3 வது வாரம் - 2018) குறித்த சடலம் இலங்கைக்கு அனுப்ப பட்டது. (சவுதி தமிழ் செய்திகள்)

Author: verified_user

0 comments: