Wednesday, 28 March 2018

ரஷ்யா-மொஸ்கோ விமான நிலையத்தின் 25% பங்குகளை கொள்வனவு செய்கிறது கத்தார் எயார்வெய்ஸ்

கட்டார் எயார்வேஸ் வ்னுக்கோவோ (Vnukovo) விமான நிலையத்தின் 25 சதவீத பங்குகளை வாங்குகிறது. மாஸ்கோ பகுதியில் அதிகளவிலான பயணிகள் போக்குவரத்தினை மேற்கொள்ளும் மூன்றாவது மிகப் பெரிய விமான நிலையமாகும்.

ரஷ்யாவின் உள்நாட்டு செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் (Akbar Al Baker) நேற்று திங்கட்கிழமை இச்செய்தியினை தெரிவித்துள்ளார்.

கட்டார் எயார்வேஸ் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தாம் வ்னுக்கோவோ (Vnukovo) விமான நிலையத்தின் சிறுபான்மை பங்குகளை வாங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் ‘சிறந்த மத்திய கிழக்கு / ஆப்பிரிக்கா பிராந்திய விமான நிறுவனம்’ என இரண்டாவது ஆண்டாகவும் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளமைக் குறிப்பிடத் தக்கது.
(கத்தார் தமிழ் நியூஸ்)

Author: verified_user

0 comments: