Friday, 30 March 2018

கத்தார் மற்றும் ஜோர்டான் புதிய புரிந்துணர்வு! வாரத்திற்கு 12 விமானச் சேவைகள்

டோஹா மற்றும் அம்மன் இடையே வாரம் ஒன்றிற்கு 12 விமானங்கள் பயணத்தில் ஈடுபடுத்த படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAA) மற்றும் ஜோர்டான் நாட்டு பிரதி நிதிகளிடையே இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் மூலம் இந்த தீர்மனம் மேற்ற்கொள்ள பட்டதாக கட்டார் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அப்துல்லா பின் நாசர் துர்க்கி அல் சுபா தெரிவித்துள்ளார்

மேலும் அவர் இரு நாடுகளும் 1976 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட விமான சேவை உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை பற்றி ஆலோசனை நடத்த பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (கத்தார் தமிழ் செய்திகள்)

Author: verified_user

0 comments: