Tuesday, 6 March 2018

கண்டி - திகன பிரச்சினையைத் தொடர்ந்து எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலமை!

நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர காலநிலமையை பிரகடணப்படுத்த தீர்மானித்துள்ளதாகஅமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று(06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னரேஅமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

10 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடனம்செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கானஅதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர்சுட்டிக்காட்டினார். 

மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம்பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெறவேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கதெரிவித்துள்ளார். 

இது தொடர்பிலான வர்த்தமானி வௌியிடப்படும்எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: