Sunday, 25 February 2018

கத்தார் VODAFONE பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி! பரிசுத் தொகை உண்டென பரவும் வதந்தி!

கத்தார் வாழ் வெடபோன் (VODAFONE) பாவணையாளர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 111 என்ற இலக்கத்திலிருந்து அல்லது ஏதாவது UNKNOWN தொலைபேசி இலக்கத்திலிருந்து ”உங்களுக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆகவே உங்களது தனிப்பட்ட(Personal Data)களை தாருங்கள். அல்லது  இந்தப் பரிசைப் பெற இவ்வளவு பணத்தொகையை செலுத்துங்கள் என்பதாக செய்தியொன்று பரவிக்கொண்டிருக்கின்றன. 

அந்த தகவல்களுக்கும் தங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பதோடு இதுபோன்று வரும் அழைப்புக்களுக்கு அல்லது SMSகளுக்கு எந்த விதமான பதிலையோ, பணத்தையோ, தனிப்பட்ட தகவல்களையோ வழங்க வேண்டாம் என்பதாக VODAFONE நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட முறையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. 
(VODAFONE நிறுவனத்தின் அறிவிப்பு)

Author: verified_user

0 comments: