Monday, 12 February 2018

சவுதியில் பலத்த மணல் காற்று! ஓட்டுநர்கள், மக்கள் எச்சரிக்கை இருக்க அறிவுறுத்தல்: (VIDEO)

சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதியின் மக்கா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளான ஜித்தா, மக்கா, பஹ்ரா மற்றும் அல்-ஜமும் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்பலத்த மணல் காற்று வீசுகிறது.  இதையடுத்து இங்கு வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக வாகனம் ஓட்டும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மேலும் மரங்கள், விளம்பர பலகைகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன இடங்கள் ஆகியவற்றிற்கு அருகே இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகைப்படம் ஜித்தாவின் Al-Balad பகுதியில் எடுக்கப்பட்டது.
Reporting by :KuwaitTamilPasangaTeam

Author: verified_user

0 comments: