Sunday, 4 February 2018

UAEல் 2 புதிய மேம்பாலங்கள் திறப்பு! போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு!

துபையில் கட்டப்பட்டு வந்த 2 மேம்பாலங்கள் சனிக்கிழமை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டன, இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவது 2 லேன் மேம்பாலம் ஷேக் ராஷித் ரோடு – ஷேக் கலீபா பின் ஜாயித் ரோடு இன்டெர்செக்ஷன்களை இணைக்கின்றன. இதன் மூலம் அல் கராமா – வேல்டு டிரேட் சென்டர் ஜங்ஸன் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும்.

2 வது 1 லேன் மேம்பாலம் அல் ஜபீல் - ஷேக் ராஷித் சாலைகளை இணைக்கின்றது. இதன் இருபுறமும் தயாராகிவரும் சுரங்கவழிப் பாதையும் இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: