Wednesday, 14 February 2018

கத்தாரில் தூசிக்காற்று (SANDSTORM) - வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சின் முக்கியச் செய்தி!

கத்தாரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து தூசிக்காற்று(SANDSTORM) பதிவாகியுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கைவிடுத்துள்ளது. வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, பாதையில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்கு இடையிலான துரத்தை அதிகப்படுத்தி பயணிப்பதோடு வானங்களை முந்தும் போது மிகவும், அவதானத்துடன் செயற்படுமாறு உள்துறை அமைச்சு  கோரிக்கை முன்வைத்துள்ளது.

மேலும் வாகன சமிஞ்சைகளை தகுந்த முறையில் பாவிப்பதோடு பயனிக்க முடியாத அளவு தெளிவின்மை காணப்பட்டால் வாகனத்தை உரிய முறையில் பார்கிங் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


Author: verified_user

0 comments: