Saturday, 24 February 2018

சவூதி அரேபியா நெடுகிலும் இன்று கடும் மழை! ஆங்காங்கு ஆலங்கட்டி மழையும் பெய்தது!

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (24.02.2018) சனிக்கிழமை கடும்  மழை பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புனித மதீனா நகரில் அதிகளவு மழை  வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அல்கோபர், காதிப், ராஸ் தனுரா, ஜுபைல், ஹாFப்ஜி மற்றும் ஹப்ர் அல் பாதின் போன்ற பகுதிகளில் சாதாரண மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

 மழை பெய்தல் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு தான் என்றாலும் அரபு நாடுகளைப் பொறுத்த வரை இது ஒரு அபூர்ப சம்பவம் போல் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பருவ கால மாற்றங்களின் ஆரம்பத்தின் போது சிறு மழை பொழிவது வழமை. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குளிர் காலம் நீங்கி வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு  கட்டியமாக இருப்பதாக கருதப்படுகின்றது. 

சவூதியைப் போன்று கத்தார் மற்றும் குவைத் நாடுகளிலும் இன்று மழை பொழிந்துள்ளதாக அந்தந்த நாடுகளில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆலங்கட்டி மழை  பெய்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ!


Author: verified_user

0 comments: