Sunday, 25 February 2018

திருமணத்திற்கு வழங்கப்பட்ட பரிசுபொருளில் வெடிகுண்டு : மணமகன் உடல் சிதறி பலி! (படங்கள்)

ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தை அடுத்த பட்னாகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 21ஆம் தேதி நடந்தது. பலர் பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கினர். வீட்டிற்கு சென்று பரிசுப் பொருள் ஒன்றை பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு பரிசு பொருளை பிரித்தவுடன் அது வெடித்து சிதறியது. 

பரிசு பொருள் வெடித்ததில் மணமகன், மணமகனின் பாட்டி, மணமகள் உள்பட பலர் காயமடைந்தனர். படுகாயமடைந்த மணமகன் மற்றும் அவரது பாட்டி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மணமகள் மேல்சிகிச்சைக்காக புர்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



Author: verified_user

0 comments: