Sunday, 11 February 2018

மக்கள் மாற்றத்தை விரும்புவதன் வெளிப்பாடே தேர்தல் முடிவுகள் - நாமல் ராஜபக்ஷ

மக்கள் மாற்றத்தை விரும்புவதன் வெளிப்பாடே தேர்தல் முடிவுகள் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 250க்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதுடன் 45 வீதத்துக்கும் அதிகமான மொத்த வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமது வெற்றியை சமாதானமாகவும் ஏனையோருக்கும் தீங்கின்றியும் கொண்டாட வேண்டும் என பெரமுன தலைவர்கள் கோரி வருவதோடு மக்கள் மாற்றத்தை நாடியுள்ளது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: