Monday, 12 February 2018

சீனாவில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி

சீனாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று இலேசான நில நடுக்கம் உணரப்பட்டது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதி அடைந்தனர். சீனாவின் வட பகுதியின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவானது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. குறிப்பாக அந்நாட்டின் தென்மேற்கு பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். சீனாவின் வடக்கு பகுதியில் அரிதாகவே நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதிலும் கடந்த 1976 ஆம் ஆண்டு தங்ஷான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

Author: verified_user

0 comments: