Wednesday, 7 February 2018

தன்னை வல்லுறவு செய்ய முனைந்த நபரை கோடரியால் தாக்கிக் கொலை செய்த விதவைப்பெண்!

வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவரை பெண் கோடரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கலென்பிந்துனுவெவயில் இடம்பெற்றுள்ளது. துட்டுவெவயில் உள்ள வீடொன்றில் 57 வயதான விதவைப் பெண் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது தனிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கட்டிடத் தொழிலாளி (39) ஒருவர், இன்று அதிகாலை நேரம் பெண்ணின் வீட்டினுள் புகுந்துள்ளார். அவரது எதிர்பாராத இந்தச் செய்கையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கோடரியால் கொத்தி தொழிலாளியைக் கொலை செய்தார்.

பின்னர், கலென்பிந்துனுவெவ பொலிஸில் அவர் சரணடைந்தார். விசாரணையின் பின் பெண்ணை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Author: verified_user

0 comments: