Thursday, 15 February 2018

குவைத்தில் கொலை செய்யப்பட்டு, குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்!

பிலிப்பைன்ஸ் பணிப்பெண் உடல் இன்று(15-02-2018) தாயகம் செல்கிறது. குவைத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஜோனா டெமாஃபிஸ் 29 படுகொலை ஆகும்.

இந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு குவைத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணவில்லை.

பொதுமன்னிப்பு முன்னிட்டு இவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தீவிரமாக இந்த பெண்ணை தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்த பெண்ணின் உடல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குவைத்தில் வாழும் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வளவு நாட்களாக இந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருந்துள்ளது.இதையடுத்து இதில் தொடர்புடைய லெபனான் நபர் மற்றும் அவரது சிரியா மனைவியையும் குவைத் அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பணிப்பெண் உடல் குவைத் அல்-சபா பிணவறையில் வைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் குவைத் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதையடுத்து குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று உடல் தாயகம் அனுப்பப்பட்டது. நேற்று குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரி ரெனே வில்லா நேரடியாக குவைத் அல்-சபா மருத்துவமனைக்கு சென்று ஜோனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று ஜோனா உடலுக்கு குவைத் பிலிப்பைன்ஸ் தூதுவர் ரெனே வில்லா,அதிகாரிகள் அனைவரும் மற்றும் குவைத் வாழ் பிலிப்பைன்ஸ் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ஜோனா டெமாஃபிஸ்  உடல் குவைத் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இந்த நிகழ்வு அனைத்து முடியும்வரையில் தூதுவர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ந பெண்மணியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான உள்ளது.இதுபற்றி செய்திகளை பிலிப்பைன்ஸ் செய்தி சானல்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளது. பல கனவுகளுடன் வந்த அந்த பெண்மணியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் குற்றவாளிகள் விரைவில் சிக்க பிராத்தனை செய்வோம்.


தமிழாக்கம் : Kuwait Tamil Pasanga Team

Author: verified_user

0 comments: