Thursday, 15 February 2018

இளைஞரின் அற்ப செல்பி ஆசையால் கைகலப்பு சபையாக மாறிய திருமண வீடு!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, மணப்பெண்ணுடன் இளைஞர் ஒருவர், செல்பி புகைப்படம் எடுப்பதற்கு, பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. 

பர்ரா என்ற இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு, மணப்பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

கைகலப்பை தடுக்க முயன்ற மணமக்களுக்கும் அடி விழுந்தது. இதனையடுத்து, உறவினர்கள் மணமக்களை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் திருமண நிகழ்வில் பரபரப்பு நிலவியது.

Author: verified_user

0 comments: