Thursday, 15 February 2018

இந்தக் குடும்பத்துக்கு முடிந்தவர்கள் உதவுங்கள், முடியாதவர்கள் பகிருங்கள் யாராவது உதவுவார்கள்

காக்கமுனை, கிண்ணியாவில் வசிக்கும் 6 பேர் கொண்ட குடும்பம் இடிந்து விழும் நிலையிலுள்ள ஒரு அறை மட்டும் கொண்ட வீடு, மலசல வசதியில்லை (திறந்த வெளி), பாழடைந்த கிணறு, ஸ்திரமற்ற வேலை, இவர்களின் அனேக நாட்கள் பட்டினியுடன்.

நேரடியாக சென்று இவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது ஒரு காட்டுவாசியின் வாழ்க்கை முறை போன்று எண்ணத்தோன்றுகிறது.

இவரின் ஒரு மகன் தரம் 5 இல் கல்வி கற்கின்றான் ஆனால் பிறப்பு சான்றிதழ் இல்லை. இன்னும் ஒருவருக்கு கூட கத்னா செய்யவில்லை அதற்கான வசதியும் இல்லை.

நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து வாழ்க்கைக்கான உதவியை எதிர்பார்க்கின்றார்.

இவர் எதிர்பார்ப்பது:
  • குடியிருப்பதற்கு ஒரு பாதுகாப்பான வீடு, மலசலகூடம்
  • இவரின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சைக்கில்
  • பிள்ளைகளுக்கு கத்னா செய்வதற்கான உதவி
தயவு செய்து நெஞ்சில் ஈரமுள்ளவர்கள் நேரடியாக இவரின் வீட்டிட்கு சென்று நிலைமைகளை பார்த்து முடியுமான வாழ்க்கைக்கான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (முஹம்மது நஜீம் தொ.பே: 0752835707)

நன்றி.
குறிப்பு: இப்பதிவு குறிப்பிட்ட நபரின் வேண்டுகோளின் படி புகைப்படங்களுடன் பதிவேற்றப்படுகிறது.
(நன்றி - மடவலை நியூஸ்)




Author: verified_user

0 comments: