Monday, 12 February 2018

சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்கப்பட்டதால் திடீரென மூடப்பட்டது இலண்டன் விமான நிலையம்:

இலண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த டப்ளியு டப்ளியு டூ (WW2) ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தேம்ஸ் நதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டுமானப் பணிகளின் போதே குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடி குண்டு 2ஆம் உலக யுத்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக, லண்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் பின்னர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, லண்டன் விமானநிலையம் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: