Saturday, 17 February 2018

வயிற்றில் போதைப் பொருட்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த வெளிநாட்டுப் பிரஜை!

பிரேஸில் நாட்டுப் பிர​ஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரேஸில் நாட்டுப் பிர​ஜை, 45 உறைகளில் கட்டப்பட்டிருந்த 500 கிராம் நிறையுடைய கொக்கைய்ன் போதைப்பொருளை விழுங்கி வைத்திருந்துள்ளாரென, எஸ்-ரே சோதனையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், விழுங்கியிருந்த மேற்படி கொக்கைய்ன் போதைப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Author: verified_user

0 comments: