Monday, 5 February 2018

புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் புனித ரமலானுக்கு முன் நிறைவுபெறும்!!

புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் புனித ரமலானுக்கு முன் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாழும் அற்புதங்களில் ஒன்றான புனித ஜம் ஜம் கிணற்றின் மராமத்துப் பணிகள் மற்றும் 8 மீட்டர் அகலாத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் அதன் புதிய நீர்பாதை அமைப்புப் பணிகள் கடந்த 3.5 மாதங்களாக எஞ்சினியர்கள், தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தொழிலாளிகள் என சுமார் 250 பேர் கொண்ட குழுவினரின் உழைப்பிலும், 11 பிரமாண்ட கிரேன்கள் உதவியுடனும் 24 மணிநேரமும் நடைபெற்று வருவதன் பயனாக தற்போது 50 சதவிகித வேலைகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சிய வேலைகள் புனித ரமலான் காலத்தில் புனித உம்ரா மேற்கொள்ள வரும் பல லட்சம் யாத்ரீகர்களின் தேவையை கருத்திற்கொண்டு புனித ரமலான் மாதம் துவங்குவதற்கு முன்பாகவே இன்னும் 3.5 மாதங்களுக்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனால் ஒவ்வொரு வக்து தொழுகையின் போதும் பாங்கு சொல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

இந்த மராமத்து பணிகளின் காரணமாக உம்ரா வரும் யாத்ரீகர்கள் மட்டும் கீழ் தளத்தில் தவாப் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இஹ்ராம் உடையுடன் வரும் உம்ரா யாத்ரீகர்கள் மட்டும் கேட் எண்: 87,88,89,93 மற்றும் 94 ஆகிய வாயில்கள் வழியாக உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிற யாத்ரீகர்கள் தவாப் செய்வதற்கு மடஃப் தளங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதேபோல் மேல்தளத்திலிருந்தும் தவாப் செய்ய பாதுகாப்பு கருதி அனுமதியில்லை, இங்கு கிரேன்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கான திட்டப்பணிகளை இரு புனிதப்பள்ளிகளின் விவகாரங்களுக்கான தலைவர் ஷேக். அப்துல் ரஹ்மான் அல் சுதைசி அவர்கள் பார்வையிட்டார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: