Saturday, 17 February 2018

குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணின் உடல் தாயகம் சென்றடைந்தது

குவைத்தில் கொலை செய்யப்பட்ட பணிப் பெண் ஜோனா டேனியல் உடல் நேற்று(16-02-2018) தாயகம் சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சி அனைவரின் மனதை கனக்கச் செய்தது.

கடந்த 2014ம் ஆண்டு காலப் பகுதியில் குவைத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற ஜோனா டேனியல்(29) ஒரு வருடத்திற்கு மேலாக காணமல் போய் இருந்தார். குவைத்தில் தற்போது அமூலில் உள்ள பொது மன்னிப்பைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் ஒரு வருத்திற்கு மேலாக பாவிக்கப்படாமல் இருந்த வீட்டில் உள்ள குளிர் சாதனைப் பெட்டியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டார். இதன் பின்னர் அனைத்து வித சட்ட நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-02-2018 அன்று உடல் தாயகத்திற்கு அனுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






Author: verified_user

0 comments: