Monday, 12 February 2018

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடாத்துங்கள் - மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை!

தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி வகை சூடியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: