Monday, 12 February 2018

உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவின் பிறகு பதவி விலகுமாறு மைத்திரிக்கு அறிவுறுத்தல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த கட்சியின் தலைவர் பதவியனை அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலேசாகர்கள் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவேளை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையினையாற்ற உள்ளார்.குறித்த உரையில், மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Author: verified_user

0 comments: