Thursday, 15 February 2018

யுவதியின் தங்கச்சங்கிலியை பறிக்க முனைந்த இளைஞன்! சுற்றியிருந்தவர்களின் தாக்குதலால் பலி!

(ஹனபி எம். தாஸீம்) பியகம் சுதந்திர வர்த்தக வலயத்தில் சேவை புரியும் யுவதியொருவரின் கழுத்தில் அணியப்பட்டிருந்த  பென்டனுடனான தங்கச் சங்கிலியை அபகறித்துவிட்டு தப்பிச்சென்றுகொண்டிருக்கும் போது அருகிலிருந்தவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதால் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் கொழும்பு தேசிய வைத் திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றிருக் கையில் உயிரிழந்துள்ளார்.

பியகம் றெய்யந்தடுவ பிரதே சத்தைச் சேர்ந்த அதிகாரி ஆரச்சிகே தொன் தனுஷ்க சம்பத் (26) என் பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹர பிரதான மஜிஸ்ரேற் ஹர்ஷ டி.மெல் மஜிஸ்ரேற் விசாரணையை நடாத்தியதுடன் குறித்த இளைஞனின் மரண விசாரணை கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இடம்பெற்றது.

Author: verified_user

0 comments: